காதல்


நினைத்தேன்

கோபப்பட்டால்

ஏன் என்பதற்குள்

ஏன் மறந்தாய் என்றாள்

மனம் உருகி போனேன்

வாழ்த்துக்கள்


சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்

வாழ்த்து சொல்ல மாட்டேன்

ஏன் சொல்லனும் எதற்கு சொல்லனும்

ஞாபகம்  படுத்த சொல்லனுமா

ஏன் ஞாபகம் படுத்தணும்

உன்னை மறந்தால் தானே நினைத்து சொல்ல

மறக்கவில்லை எந்நாளும்……..

அழிவின் விளிம்பில்


தண்ணீர் இல்லாமல் விதைகள் முளைப்பதுண்டோ

விதைகள் இல்லாமல் வேர்கள் துளிர்வதுண்டோ

வேர்கள் இல்லாமல் தாவரங்கள் நிலைப்பதுண்டோ

தாவரங்கள் இல்லாமல் உயிரினங்கள் வாழ்வதுண்டோ

உயிரினங்கள் இல்லாமல் பூமி சுழல்வதுண்டோ

ஒன்று இல்லாமல் மற்றொண்டா என்று நினைத்ததுண்டோ

பூவுலகம் அழிவதை பார்க்காமல் நீ இருப்பதுண்டோ!

வாழ்த்துக்கள்


அன்பு செல்லமே………

உன்னை பற்றி கவிதை எழுத நினைத்தேன்

வார்த்தைகளே கிடைக்க வில்லை எனக்கு

நிலவை உன் முகத்தோடு ஒப்பிட

தோற்போம் என்றெண்ணி தெறித்து அது ஓட

உன்னை பார்த்து சிங்கம் பயப்படும் என்பதால்

உன் வீரத்தை ஒப்பிட முடியாமல் நான் தவிர்க்க

வானவில்லை பார்த்து உன் நிறத்தை சொல்ல

தான் அதற்கு நிகரில்லை என்று தன்னகத்தே மறைய

உன் குரலை பதிவு செய்ய சிம்பொனியை அழைக்க

அதற்கான தரம் இல்லை என நடையை கட்ட

மேகத்தை பிடித்து உனக்கு மெத்தைகள் தைக்க

உன் மேனி என்னைவிட மென்மை என்று தலை குனிய

உலகில் உள்ள மொழிகளில் எல்லாம் உன் பெயரை எழுத நினைக்க

தமிழை தவிர எங்களால் முடியாது என அவைகள் கம்பளம் விரிக்க

நீ இப்படியே என் கவிதையை ஏற்க

என்றென்றும் வாழ்க வாழ்க

 

வாழ்த்துக்கள்

குடும்பத்தில் இன்பங்கள் பொங்கிட 

குழந்தைகளின் கல்வி சிறந்திட 

சமுதாய ஒற்றுமைகள் ஓங்கிட

இயற்கை தாயின் மனம் குளிர்ந்திட 

வான் மேகங்கள் என்றும் வாழ்த்திட 

வறுமை இல்லா சமுதாயம் நிலைத்திட 

இளைஞர்களின் கனவு மெய்ப்பட

காவிரி தாயின் உரிமை வந்திட 

வருக வருக என வரவேற்போம் விளம்பி வருடம் 

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
 

முகப்பு

ஒரு இளம் கவியின் கவிதை வரிகள் உங்களுக்காக 

மகளிர் தின வாழ்த்துக்கள்

பின் தூங்கி முன் எழுந்தாய்
நான் எழ தேநீர் கொடுத்தாய்
தலைக்கு என்னை வைத்து தேய்த்தாய்
என் உடல் நலத்தை காத்தாய்
நான் விரும்பும் துணிகளை எடுத்தாய்
உன் உடல் வலிக்க அதை துவைத்தாய்
வட்ட வட்ட தோசை சுட்டாய்
வண்ண வண்ண சோறு போட்டாய்
உண்மை எனும் பெண்மையாய் வாழ்ந்தாய்
உனக்கு இதோ எனது வாழ்த்துக்கள்

மன்னிப்பாயா

சர சர என வெடிக்கும் அன்பே 
உன்  கன்னங்களை  சிவக்க வைத்த
கொடியவனாக என்னை பார்க்காதே
உன் கண்ணில் நெஞ்சில் சோகம் என்றால்
தாங்காது என் பொன் மனம்

நிலவுக்கு வான் போல
கடலுக்கு அலை போல
உனக்கு நானாகவே இருப்பேன்
மன்னிப்பாயா என்னை மன்னிப்பாயா

ஹைக்கூ

நல்லா இருப்பதற்கு காதல் கடலை மிட்டாய் அல்ல
கடலை போட்டால் வரும் மிட்டாய்

ஹைக்கூ


காமிரா முன் தெரிவது காதல் அல்ல
காமிரா கண்ணில் தெரிவது தான் காதல்

புரட்சி

வாழ வேண்டும் வாழ வேண்டும்
எல்லோரும் இங்கு வாழ வேண்டும்
வளர வேண்டும் வளர வேண்டும்
வின்னை தொட நாம் வளர வேண்டும்
உழைக்கும் கைகள் உயர வேண்டும்
உழவும் விவசாயி ஊரறிய வேண்டும்
 
தண்ணீர் பஞ்சம் இல்லா தமிழகம் வேண்டும்
தஞ்சை நெல்லை தேசிய பயிராக வேண்டும்
மது பாட்டில் இல்லா தெருக்கள் வேண்டும்
எங்கள் பெண்களின் தாலி நிலைக்க வேண்டும்
துட்டு இல்லா பள்ளிகள் வேண்டும்
குழந்தை செல்வங்கள் வானகம் செல்ல வேண்டும்

கொடிகள் இல்லா தெருக்கள் வேண்டும்
தெருக்கள் தோறும் நல்ல சாலைகள் வேண்டும்
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்த வேண்டும்
நிமிர்த்திய நெஞ்சில் உயர்ந்த எண்ணம் நிலைக்க வேண்டும்

வாழ்த்துக்கள்

மாலை நேர தென்றலாய் நீ வந்தாய் என்னிடம்
பூ கூட வெட்கமாய் நீ சிரித்தாய் அவ்விடம்
நிலவு கூட ஓரமாய் ஒதுங்கி கொள்ள நேரிடும்
மேகங்கள் யாவும் கூட்டமாய் தூறல் போட வந்திடும்
மலர்கள் தன்னை மெத்தையாய் பறித்து கொள்ள சொல்லிடும்
காட்டு ராஜா சிங்கமும் உன்னையே இருக்க வைத்திடும்
உனக்கு தைக்க ஆடையாய் பட்டுப்பூக்கள் வரிசையில் நின்றிடும்

உன் அழுகை கூட என்னிடம் ஒரு ராகம் பாடி சென்றிடும்
காற்று கூட உன்னிடம் கவிதை பாட வந்திடும்
தங்க மயில்களும் ஆடிடும் தங்கள் கலாபத்தை போர்த்திடும்
பெரு வெள்ளம் வந்திடும் அது சிறு வெள்ளமாய் ஓடிடும்
மின்னல் வந்து காட்டிடும் உன் ஒளியின் அளவை பார்த்திடும்
வானவில் தன்னகத்தே தோன்றிடும் நிறங்களை தானே பொழிந்திடும்

வாழ்த்துக்கள்

அந்த பவுர்னமியின் முழு நிலவு உன்   முகத்தில் 
அந்த சலங்கையின் மணி ஓசை உன் சிரிப்பில் 
அந்த குயில்களின் பாடல் உன் அழுகையில்
அந்த இளங்காற்றின் தென்றல் உன் தொடுதலில் 
அந்த மெத்தைகலின் மென்மை உன் மிதிகளில் 
அந்த வானவில்லின் நிறம் உன் மேனியில்
அந்த சிங்கத்தின் வீரம் உன் சின்னத்தில்

வாழ்த்துக்கள்


பூந்தோட்டம் பூந்தோட்டம்
பூக்கள் பூக்கும் தோட்டம்
உன்னை பார்த்தால் கொஞ்சம் தலையை ஆட்டும்
பூக்கள்தான் கூடி பேசும்
நறுமணத்தை தானே வீசும்
கைகளை தான் தட்டி உன்னை வரவேற்கும்
குயில்களின் கூட்டமோ ஆர்ப்பரித்து முழங்க
மையில்களின் தோகைகளோ வானவில்லாய் தோன்ற
கிளிகளின் பாடல்களோ காதை பிளக்க
அருவிகளின் மேகங்களோ உன்னை சூல
நீ வந்தாய் ஒளியின் தூதாக

விழிப்புணர்வு


மிருகமாய் இருந்தேன்,
மண்ணை பார்த்தேன் பசுமை வந்தது
பசுமை பார்த்தேன் உணவு வந்தது
நெருப்பை பார்த்தேன் ருசி வந்தது
உடுத்தி பார்த்தேன் மானம் வந்தது
கல்லை பார்த்தேன் ஆயுதம் வந்தது
ஆயுதம் பார்த்தேன் சிற்பம் வந்தது
சிற்பம் பார்த்தேன் வடிவம் வந்தது
வடிவம் பார்த்தேன் எழுத்து வந்தது
எழுத்தை பார்த்தேன் வார்த்தை வந்தது
வார்த்தை பார்த்தேன் மொழி வந்தது
மொழி பார்த்தேன் இனம் வந்தது
இனம் பார்த்தேன் ஜாதி வந்தது
ஜாதி பார்த்தேன் பிளவு வந்தது
பிளவை பார்த்தேன் தனித்து நின்றேன்
தனித்து பார்த்தேன் மீண்டும் மிருகம் ஆனேன்

தன்னம்பிக்கை


ஆயிரம் கனவுகள் காண்பதுண்டு
அதில் எத்தனை கனவுகள் பலித்ததுண்டு
ஆயிரம் மொட்டுகள் வருவதுண்டு
அதில் எத்தனை மலர்கள் பூப்பதுண்டு
ஆயிரம் உயிர்கள் பிறப்பதுண்டு
அதில் எத்தனை உயிர்கள் நிலைப்பதுண்டு
ஆயிரம் வின்மீன்கள் தெரிவதுண்டு
அதில் எத்தனை விண்மீன்கள் தொடர்வதுண்டு
ஆயிரம் கண்கள் உன்னை பார்பதுண்டு
அதில் எத்தனை கண்கள் உன்னை தேடுவதுண்டு
ஆயிரம் வெற்றிகள் வருவதுண்டு
அதில் எத்தனை வெற்றிகள் நிலைப்பதுண்டு
ஆயிரம் குரல்கள் ஒளிப்பதுண்டு
அதில் எத்தனை குரல்கள் கேட்பதுண்டு
ஆயிரம் சுகங்கள் உணர்வதுண்டு
அதில் எத்தனை சுகங்கள் பதிவதுண்டு
ஆயிரம் தோல்விகள் வருவதுண்டு
அதில் எத்தனை தோல்விகள் தொடர்வதுண்டு

காதல்

நினைத்தேன் கோபப்பட்டால் ஏன் என்பதற்குள் ஏன் மறந்தாய் என்றாள் மனம் உருகி போனேன்