தண்ணீர்
இல்லாமல் விதைகள் முளைப்பதுண்டோ
விதைகள்
இல்லாமல் வேர்கள் துளிர்வதுண்டோ
வேர்கள்
இல்லாமல் தாவரங்கள் நிலைப்பதுண்டோ
தாவரங்கள்
இல்லாமல் உயிரினங்கள் வாழ்வதுண்டோ
உயிரினங்கள்
இல்லாமல் பூமி சுழல்வதுண்டோ
ஒன்று
இல்லாமல் மற்றொண்டா என்று நினைத்ததுண்டோ
பூவுலகம்
அழிவதை பார்க்காமல் நீ இருப்பதுண்டோ!