உன் விழிகள் உன்னோடு உன் பார்வை என்னோடு
உன் இதயம் உன்னோடு உன் சுவாசம் என்னோடு
உன் மொழிகள் உன்னோடு உன் வார்த்தை என்னோடு
உன் ராகம் உன்னோடு உன் பாடல் என்னோடு
உன் கால்கள் உன்னோடு உன் பாதை என்னோடு
உன் கைகள் உன்னோடு உன் செயல்கள் என்னோடு
உன் கூந்தல் உன்னோடு உன் வாசம் என்னோடு
உன் செவி உன்னோடு உன் சப்தம் என்னோடு
உன் நா உண்டு உன் சுவை என்னோடு
உன் நரம்பு உன்னோடு உன் உணர்வு என்னோடு
உன் ரோமம் உன்னோடு உன் சிலிர்ப்பு என்னோடு
உன் நகம் உன்னோடு உன் நகச்சாயம் என்னோடு
உன் விரல்கள் உன்னோடு உன் இசை என்னோடு
உன் கண்ணீர் உன்னோடு உன் வலி என்னோடு
உன் உணவு உன்னோடு உன் செறிவு என்னோடு
உன் புன்னகை உன்னோடு உன் மகிழ்ச்சி என்னோடு
No comments:
Post a Comment